வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நற்றிணை 19 _ நெய்தல் திணை

 

புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

- நக்கண்ணையார்

v  இறால் மீனின் புறம் போன்ற தாழையின் வேர்களும், பெரிய சுறாமீனின் பற்களைப் போன்ற முட்களுடைய இலைகளையும், பெரிய யானையின் கொம்பு போன்ற அரும்பும், நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போன்ற தாழம்பூவும் அமைந்துள்ள இடத்தினையுடையதும்,

v  விழா நடைபெறும் இடமெல்லாம் மலரின் நறுமணத்தைப் பரப்பி நிற்கும்  நீரையுடைய கடற்பரப்பிற்குத் தலைவனே!

v  மிகுந்த மணிகள் கட்டிய நெடிய நினது தேரைப் பாகன்  உன் ஊருக்குச் செல்லும் பொருட்டு  ஓட்டுவதனால், நீயும் புறப்படத் தயாராக இருக்கிறாய்.

v  இன்னும் சில நாட்களில் வருவேன் என்று குறிப்பிட்டுச் செல்கிறாய். அந்த சிலநாளளவும் இவள் உயிர்வாழ மாட்டாள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு செல்வாயாக!

v  {விரைவில் வரைவு (திருமணம்) செய்து கூட்டிச்செல் என்று கூறுவதாக அமைந்துள்ளது}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...