நன்றி : தீக்கதிர் நாளிதழ் (15.01.2023)
முனைவர் போ. ஜான்சன், உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி; பேச: 9843160719
ஞாயிறு, 15 ஜனவரி, 2023
சனி, 14 ஜனவரி, 2023
சமூக நிலை _ இன்றைய கொண்டாட்டம்
அகத்தில் ஒளிர்ந்த தமிழகம்
நாடெனச் சொல்வதில் பெருமிதம்
இருப்பினும்
சாதிய சாக்கடை எனும்
முடைநாற்றம் வீசுகின்ற
பாழ்பட்ட நாட்டிலே
தெருச்சண்டை போடுகிறோம்
நாடா? அகமா?
தேவையற்ற ஒன்றிற்காய்
தேவையானதைத் தேவையறிந்து மறந்து
தேவையில்லாத வேலை செய்யும்
தேவையற்ற மனிதர்களின்
தேவையற்ற செயல்பாடுகளால்
தேவையற்ற ஈடுபாட்டோடு
தேவையின்றிச் சிலரின்
தேவைக்காகப் பின்தொடரும்
அவலம்
புத்தாண்டு மகிழ்வு
அகத்தில் மலர்ந்தால் என்ன?
நாட்டின் மலர்ந்தால் என்ன?
அகமாக இருப்பினும் நாடாக இருப்பினும்
சாதீய சாக்கடைகள் நாற்றமோ
அச்சாக்கடையில் நெளியும் புழுவோ
(புழுவே என்னை மன்னித்துவிடு மனிதனோடு உன்னை ஒப்பிட்டுப் பேசுவதற்காய்)
மலம் கலக்கும் நிலையோ
மாறிடவா போகிறது?
இதில்
புத்தாண்டு நாளிற்காய்ப்
புதிதாய் ஒரு புரட்சி
பிறக்கின்ற ஆண்டு
தையில் பிறந்தால் என்ன?
சித்திரையில் பிறந்தால் என்ன?
புத்தாண்டு புதுமைகள் செய்யும் புரட்சியாண்டாக என்று மலரும்?
நம் மனநிலை மாறாமல்
புத்தாண்டு மலர்ந்து மட்டும்
என்ன
புதுமை காணப்போகிறது?
நாசமாய்ப் போகட்டும் சாதிய சமூகம்
நற்பண்பு கொண்டு வளரட்டும் சாதியற்ற சமுதாயம்
அன்று
இணைந்து கொண்டாடலாம்
தமிழர்ப் புத்தாண்டு.......
செவ்வாய், 3 ஜனவரி, 2023
கிறித்து பிறப்புப் பெருவிழா வாழ்த்து
மனித மனமெனும் மயக்க நிலங்களில்
கருணைப்பூவனம் குழுமிப்பூத்திட
புனித நாயகன் பிறந்த நாளிதில்
அலைகள் தொடுத்திடும் கடலின் ஞானமாய்
நுரைகள் பூத்திடும் பாலின் வெண்மையாய்
இருள் உறு சிந்தையர்க்கும்
இன் அருள் சுரந்தவர்
அருளும் அபயமும் அளிக்கும் அற்புதர்
மறுஉறு பிறவி நோய்க்கு மருந்தானவர்
வேதநாயகர்
இன்று
நம்மில் / நம் மனங்களில் பிறந்தார்
இறவாத இன்ப அன்புடன்
முனைவர் போ. ஜான்சன்
புத்தாண்டு வாழ்த்துகள்
நாள்காட்டி மட்டும் அல்ல
நாமும் மாற்றப்பட வேண்டியவர்களே!
சிந்தனையில்
சொல்லில்
செயலில்
என
சமூகத்தின் அனைத்து நிலைகளிலும்
மாற்றங்கள் தொடங்க வேண்டும்
மாற்றங்கள் மனத்திலிருந்து
பிறக்க நவில்கிறேன்
புத்தாண்டு வாழ்த்துகள்
சிறப்புடைய இடுகை
கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்
சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...
-
வாசிப்பின் திரை *பிம்பச் சிறை* *எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்* எம்.எஸ்.எஸ். பாண்டியன் (பூ.கொ. சரவணன்) ---------------...
-
நாள்காட்டி மட்டும் அல்ல நாமும் மாற்றப்பட வேண்டியவர்களே! சிந்தனையில் சொல்லில் செயலில் என சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் தொடங்க வேண...
-
கரோனா காலத்தில் வாசிப்பு *கறுப்பர் நகரம்* – *கரன் கார்க்கி* பாரதி புத்தகாலயம் ------------------------- சென்னை என்றதுமே நம் நினைவில...





