புதன், 23 ஏப்ரல், 2025

சூசையப்பர் ஒரு நேர்மையாளர்


வேத மொழித் திறலோன்: அருள் முற்றிய மாமுனி

சிந்தை தேறிய தேறல் செய் வாகையான்

மரியன்னையின் மௌனத்தில் மலர்ந்த மகிமையான்

மற்றவர்க்கே தெரியாத இரகசிய நம்பிக்கையாளன்


இயேசுவைப் புனிதத் தோளில் தூக்கி நடந்தவர்

இரவுக்கும் பகலுக்கும் காவலனாய் விளங்கியவர்

தெய்வ பாதம் தேடி எழுந்த மாந்தனாய்

தூய நெஞ்சில் திருமறை பதித்தவர்


கடவுளின் திட்டமே மேலான திட்டமென்று

கன்னி மரியைக் கருத்தாய் காத்தவர் 

நேர்மையே தனது சீரிய வழியென

நெஞ்சம் கொண்டு வாழ்ந்திட்ட செம்மையாளர் 


தேவுலகு என்றும் இறைஞ்சும் தலைவன் 

பூவுலகு வந்து பிறந்த உம்மை

மூவுலகு என்றும் வாழ்த்தும் 

நேர்மையாளர் நீரே அன்றோ!!!


சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...