வினைமுற்றி மீள்வான் தேர்பாகற்குச் சொல்லியது
- மருதன் இளநாகனார்
v பாகனே ! விரைந்து சென்றதால் வருந்திய குதிரைகளை உடைய வீரர்கள், இடையில்
தொங்கவிடப்பட்ட வாளின் கச்சையின் பிணிப்பைத் தளர்த்தி, ஆங்காங்குத் தங்கித் தாங்கள்
விரும்பியவாறு அமர்ந்து, மெல்ல நடந்து வருவாராக;
v உருக்கப்பெற்ற நறுமணம் மிக்க நெய்யில் பாலைச் சிதறினாற் போன்ற குரலையுடைய
அழகிய சிறுசிறு புள்ளிகளமைந்த காண்பவர்கள் விரும்பும் தன்மை கொண்ட கானங்கோழி;
v மழை நின்றபின், நீர் வடிந்துகொண்டிருக்கிற அகன்ற காட்டிலே, ஈரமணலை நன்றாகப்
பறித்துத் தம் இரையாகிய நாங்கூழ்ப் புழுவைக் கவர்ந்து அதனைக் கொன்று, தன் துணையாகிய
பெண்கோழிக்கு ஊட்ட வேண்டி, அப்பெடையை நோக்கி அழைக்கிறது. அத்தகைய காட்சியைப் பார்.
v எனவே, நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுவரை தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே
குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக!
v {தலைவி எனக்காகக் காத்திருப்பாள்}

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன