வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நற்றிணை 70 _ மருதத்திணை

 

காமம் மிக்க கழிபடர்கிளவி

- வெள்ளிவீதியார்

v  நீர்த்துறையிலே கழுவிய வெள்ளாடையின் மாசற்ற தூய வெண்ணிறம் கொண்ட சிறகினையுடைய சிறிய குருகே!

v  தலைவனின் ஊரில் உள்ள நீர், என்னுடைய ஊரினுள் வந்து பாய்கின்ற வயற்பரப்புடைய நல்ல ஊரினைச் சேர்ந்த என் தலைவரிடம் சென்று,

v  என்னுடைய அணிகலன்கள் கழண்டு விழும் துன்பத்தை இதுவரை சொல்லாமல் இருக்கிறாயே!

v  நீ எம் ஊரினை அடைந்து, அங்குள்ள குளத்தில் உள்ள துறையிலே புகுந்து தேடிச் சினையுள்ள கெளிற்று மீனைத் தின்கின்றாய்.

v  அதன்பின், அவருடைய (தலைவர்) ஊருக்குச் செல்வாயாக; எம் ஊரில் வந்து உண்ட நன்றி மறவாமல் அவரிடம் என் நிலைமையைக் கூறுவாயோ? அல்லது மறந்திடுவாயோ? ஒன்றினை ஆராய்ந்து கூறு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...