தலைவனின் பிரிவைத் தலைவிக்குத் தோழி உணர்த்துகையில் தலைவியின் கூற்றாக அமைந்தது
- கபிலர்
v என் தலைவர், தான் சொன்னபடிச் செயலாற்றி நிற்பவர். திரும்பி வரக் காலம்
தாழ்த்தினாலும் என் தலைவர் இனியவர். என்றும் என்னுடைய தோள்களைப் பிரிந்து அறியாதவர்.
v தாமரையில் எடுத்த தேனைச் சந்தனமரத் தேன்கூட்டில் சேர்த்து வைத்திருக்கும்
தேன் போல உயர்ந்தது அவருடனான நட்பு. அவருடைய அந்த நட்பு சான்றோர்களின் நட்பு போன்றது.
v நீர் இல்லாமல் உலகம் இயங்காது. அதுபோல அவர் இல்லாமல் நம்மால் வாழமுடியாது
என்பது தலைவருக்குத் தெரியும். அப்படிப்பட்ட நம்மைக் காத்து வந்திருக்கிறார்.
v அப்படிப்பட்ட நம் தலைவர், பிரிவினால் நெற்றி பசந்து மெலியும் என்னைவிட்டுச்
செல்வாரோ?
v அப்படிச் செய்வதற்கு அவருக்குத் தெரியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன