வியாழன், 7 செப்டம்பர், 2023

விருது & பாராட்டு



 

Ave Maria மரியே வாழ்க




உலகம் முழுதாளும் உன்னதமே!

உயிர்ப்பின் உறைவிடமே!

உள்ளன்பு உருக 

உம்மை அண்டி வரும் வேளையிலே 

உய்வித்து எம்மை

உம்பதம் சேர்ப்பவளே - அம்மா

உம் அன்பிற்கும் 

உண்டோ அடைக்கும் தாழ்!

விளையாட்டை விரும்பு




உடல் மொழி பேசும் ஆட்டம்

உள்ளமது துடிக்கும் ஆட்டம்

கள்ளமில்லா உள்ளமதில் கைகள் இணைத்து 

கருத்தாய் உதிக்கும் அணியினரின் திறன்மிகு எழுச்சி 

எழுவரோடு இணைந்து எதிர்வரும் வீரனைப் பிடிக்க

எத்தனிக்கும் ஆட்டம்


எதிர்வரும் வீரனோ 

மந்திரம் நிறுத்தாமல் மனவலி குன்றாமல் 

மருங்கி மருங்கி முன்னேறி எட்டிப்பிடித்து 

எல்லைக்கோடு நோக்கி விரைந்தோடும் ஆட்டம் 


மந்திரம் நிறுத்தி மனத்தை மயக்கி 

காளையாகச் சீறி வரும் வீரரைக்

கட்டியணைத்து நழுவ விடாமல் 

கட்டமதில் கட்டிப்போடும் ஆட்டம்

நம்ம மரபில் உதித்த ஆட்டம் 

அது 

கபடி ஆட்டம் 🤼




மூனில் சந்திராயன் மூன்று




நாயகன் வகுத்துத் தந்த வானளாவிய பாதை தன்னில் இன்று 

சந்திராயன் ஓங்கி வளர்ந்து சென்று தன்னடி பதித்து நிலைத்தே 

நின்றது உலகினில் முதன்முறை தென்துருவம் தனிலே தன்னந் தனியே!

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...