சனி, 28 அக்டோபர், 2023

பதிற்றுப்பத்து - கழைஅமல் கழனி

 கழைஅமல் கழனி

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது (நான்காம் பத்து)

  •  பல போர்களில் ஈடுபட்டு பலரையும் வென்ற தலைவன் நீ!
  •  உன் நற்குணமும் சிறப்பும் நான்கு திசைகளிலும் சென்று விளங்கித்தோன்றும்.
  •  முத்துடைய கொம்புகளைக்கொண்ட யானை போர் வேட்கையால் பிளிறுமாறு அதன்மீது அமர்ந்து, தூசி மிகுந்து எழும் காலாட்படையோடு பகைவர் நாட்டின்கண் செல்பவனே!
  •  பெரிய சுற்றத்தார்க்கு மகிழ்ச்சி உண்டாகுமாறு பகைவர் நாட்டில் பெற்ற அரிய பொருள்களைக் கொடுத்து அதனால் பெரும் மகிழ்வு கொள்பவனே!
  •  கழங்குகளால் முடிவறிந்து கூறும் நிலையை மாற்றி, போரில் வெற்றி பெறுபவனே!
  •  நீ பெற்ற வெற்றிகள் அனைத்தையும் எண்ணிப்பார்க்குமிடத்து, உன் குணங்களுள் ஒன்றுமட்டும் நான் வியந்து நோக்கினேன்.
  •  எதிரிகள் செய்கிற கொடிய போரில், மலைபோன்ற யானைப்படையைக் கொண்டு சென்று அவர்கள் நாட்டில் உள்ள நீண்ட காலுடைய நாரைகள் தங்கி இரை உண்ணும் மூங்கில் போன்று வளர்ந்த நெல்வயல்களை உடைய நாட்டைத் தன்வயப்படுத்தி அங்கேயே தங்கி இருந்தபோதும், கோபம் கொள்ளாமல் வீற்றிருக்கும் உன்னைக் காணும்போது எனக்கு வியப்பு உண்டாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...