- கள்ளம்பாளனார்
v தோழி! உன்னுடைய நிறத்தின் மென்மையைப் பார்த்தும், மெல்லிய இனிய சொல்லால்
"நான் செல்லும் வழியில் உன்னால் வர இயலாது" எனப் பலவாறாகக் கூறியும், தலைவர்
பொருளீட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
v இந்நாளில், நெடிய குளத்தின் நீரில்லாத நீண்ட வழியிலே, சிவந்த அடியினையுடைய
மரா மரத்தின் அருகில் மறைந்து நின்று, வளைந்த வில்லையுடைய கள்வர்கள் அதிகம் இருப்பர்.
v அவ்வாறான நிலையிலும் அச்சங்கொள்ளாது,
v மலையில் உள்ள குகைக்குள், பெரிய நகங்களை உடைய பெண்புலி, குட்டிகளை ஈன்றதனால்
ஆகிய வேதனையும் (வலியும்), பசியும் தீரும்படி மிகுந்த கோபத்துடன் சிவந்த கண்ணையுடைய
புலியானது, பெரிய கொம்பினையுடைய யானையின் புள்ளிகள் உடைய முகத்திற்கு நேராகச் சென்று
பாயும்.
v அவ்வாறான ஆபத்து மிகுந்த வழியின்கண்ணே தலைவர் சென்றிருக்கிறார்.
v அவர் செல்லுவதனை அறிந்த நான் சிறிதும் வருத்தப்படவில்லை. நீயும் வருந்தாதே;
v அவர் செல்லும் காரியம் அவர்க்குக் கைகூடுவதாக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன