புதன், 6 நவம்பர், 2019

திராவிடம் போற்றிய திருமகன்


புதுவை மண்ணில் பூத்த மலரே!
புரட்சி செய்யப் புகுந்த நாயகா!
பிறந்த நாள்தனில் பேதை நானோ
பிதற்று கின்றேன் பிழையைப் பொறுக்க!
                         
தமிழே அமுதெனச் சாற்றினீர் நீரே!
உயிரே அதுவென உணர்த்தினீர் நீரே!
மொழியாம் தமிழை மேன்மை படுத்த
ஓயா தமிழ்ப்பணி ஆற்றினீர் நீரே!

முத்தமிழ்க் காப்பியம் முகிழ்த்தன உம்மிடம்
நற்றமிழ் கொண்டு நாட்டினீர் அதனை!
எத்தமிழ்ப் புலவரும் ஏங்கியே நிற்பர்
உம்தமிழ் கற்க உறுதி கொண்டே!

பாரதி மீதினில் பற்றுக் கொண்டவர்
பெரியார் கொள்கை பற்றிக் கொண்டவர்
அண்ணா மீது அன்பு கொண்டவர்
அன்னைத் தமிழ்மேல் ஆருயிர் கொண்டவர்

புதிய உலகம் புத்துயிர் பெறவே
ஆக்கினீர் எமக்கு ஆக்கம் பலவும்!
புரட்சிக் கருத்தைப் புகட்டினீர் எமக்கு
அதனால் தானே ஐயம் தெளிந்தோம்

‘தமிழின் பகைவர் தமக்குப் பகைவர்’
என்றே முழக்கம் எழும்படி செய்தவர்
தமிழர் நிலையை உயர்த்திய
திராவிடம் போற்றிய திருமகன் நீரே!


---------------------------------------------------------------------------------------

10.03.2016 அன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு விழாவில் படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...