
'சுர்ஜித்' என்ற
ஒற்றை வார்த்தையில்
மனித மனங்களில்
மகத்துவம்
ஏற்றி
சுகமாய் மீட்டிட
வேண்டிடும் வேளை!
இயற்கையாய் நடந்த விபத்திது
என்றல்லாமல்
மனித மனங்களை மாற்றிய
நிகழ்விது என்றே கூறனும்
இரு நாட்களாகப்
பூமித்தாயின் வயிற்றில்
இருந்து
பிரசவிக்கத் தயாராகிக்
கொண்டிருக்கும்
பூவை
யார் பெறுவர்
எப்போது பெறுவர்
இயற்கை அன்னையின்
இறைஞ்சுதல்
மனித மனங்களின்
குமுறல்கள்
வீரர்களின் சுயபோராட்டம்
வீரமகன் உன்னைப்
பெற்றெடுக்க
பூமித்தாய்க்கு
ஏற்பட்ட பிரசவ
வேதனை!
அத்தனையும்
சுகமாய் முடித்திட்டு
நலமுடன் வா மகனே!
நலமுடன் வா சாமி!
அறிவியல் ஆயிரம் இங்குண்டு
அதனைக் குறைகூறி
பயனென்ன இப்போது!
ஓருயிரைக் காப்பாற்ற
ஓராயிரம்பேர் திரண்டு
ஓரே மூச்சாய் உமிழ்கின்றனர்
மீண்டு வா சாமி!
நாங்கள் இருக்கிறோம்
உன்னை நலமுடன்
மீட்போம் சாமி!
நம்பிக்கை இழக்காதே சாமி
மீண்டு வருவாய் சாமி!
(*குழந்தையைக் காப்பாற்ற
நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது எழுதியது)
மிக வருத்தம் - குழந்தையை
உயிருடன் மீட்க முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன