திங்கள், 16 ஆகஸ்ட், 2021

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

 

அறிவுக் கடலாய் ஆக்கத் திருவாய்!

என்னில் உதித்த இலக்கிய மேதையாய்!

பண்பில் கொண்ட பாச மலரே!

தமிழாம் அன்னையைத் தரணியில் உயர்த்த

வேட்கை கொண்டு வீறு எழுந்தாய்!

படையாம் எதிரியைப் பாங்குடன் எதிர்த்தாய்!

வள்ளுவன் புகழை வானளாவ உயர்த்திய

உம்புகழ் தனையே ஊரார் காத்திட

என்றும் வாழ்வீர் எங்கள் உளம்தனில்!

 

செம்மொழி என்னும் தகுதி கிடைத்தது

வாதிடும் உமது வாய்மொழித் திறனால்!

சங்கம் வைத்துத் தமிழ்வளர்த் தாரன்று

சங்கத் தமிழைத் தரணியுயர்த் தினாயின்று!

இலக்கணக் கனியெடுத்து ஈடில்லா பெருமைதந்து

தொல்காப்பியப் பூங்காவெனத் தொல்லுலகில் இயம்பிட்டாய்!

தேன்குடிக்கும் ஆவலில் சிட்டெனவே பறந்துவந்து

இலக்கணச் சுவையை ஈடில்லாமல் பெற்றோம்!

 

காவியம் பல கண்ட காவியத் தலைவனே

நனிகா வினையேக் கண்டோம் உம்மிடம்!

என்றும் உம்புகழ் காணும் ஏற்றமே!

எங்கும் தமிழ்ப்பணி என்றிருந்த உம்புகழ்

ஐயமின்றியே ஔடதம் ஏற்றிட

நாளும் உழைப்போம் ஞாலமதைக் காப்போம்!

(நேரிசை ஆசிரியப்பா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...