இடித்துச் சிதறும்
எரிமலைக் குழம்புபோல் வெடித்துச் சிதறி விரையும் கவி பாரதிதாசன் (அப்துல் ரகுமான்).
பாரதிதாசனின் தொடக்காலத்தில் பக்திநெறியில் நின்று தன்னுடைய பாடல்களைப் பாடினாலும்,
திராவிட இயக்கத்தின் தொடர்பிற்குப் பிறகான அவருடைய பாடல்கள் எரிமலைக் குழம்புபோல் கனல்களாகத்
தெரிக்கத் தொடங்கியிருந்தன. சாதி, சமயம், மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், கடவுள் மறுப்பு,
தொழிலாளர் இயக்கம், ஆரியர் எதிர்ப்பு, இன உணர்வு, மொழி உணர்வு என அனைத்துத் தளங்களிலும்
தன்னுடைய கவிதைகளைப் பதிவு செய்துள்ளார். இதனை ஆய்வுநோக்கில் ஆராய்ந்ததே இந்நூல்.
திராவிட இயக்கப் பின்னணியில்
பாரதிதாசன், திராவிட இயக்கக் கோட்பாடுகளும் பாரதிதாசனும், பாரதிதாசன் படிநிலை வளர்ச்சி
என்ற மூன்று தலைப்புகளில் விரிவான ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளார் பாரதிதாசன் ஆராய்ச்சியாளர்
ச.சு. இளங்கோ. திராவிட இயக்க வரலாற்றில் பாரதிதாசனின் இடத்தை விரிவாக விளங்கிக்கொள்ள
இந்த ஆராய்சி நூல் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பது வெள்ளிடை மலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன