பாரதியின் வழிகாட்டுதலில் நடந்தவர்,
பாரதியைத் தன்னுடைய மேலான குருவாகக் கொண்டவர் அவருடைய தாசனாக வாழ விரும்பியவர் பாரதிதாசன்.
ஆனால் குருவை விஞ்சிய சீடனாக வலம்வருகிறார் பாரதிதாசன். புதியதோர் உலகை உருவாக்கப்
புறப்பட்ட பாரதிதாசன் அமைதியின் உருவாக மட்டுமல்லாமல், பகுத்தறிவுக் கனலாகப் பொங்கியெழுந்தவர்.
பெண்ணடிமையை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் தாம் படைத்த மூன்று காப்பியங்களில் அதனைச்
செயல்வடிவம் கொடுத்தும் காட்டியவர். அவருடைய பாடல்களில் புயலும், தென்றலும் மாறிமாறி
வீசும்.
சாதியும், சமயமும், பெண்ணடிமைத்தனமும்,
பொதுவுடைமை இல்லாமையுமே இன்றைய உலகு சீர்கெட்டுக் கிடக்கக் காரணம் எனக்கூறும் அவரின்
வார்த்தைகள் கனல்களாகச் சுட்டெரிக்கிறது. சோசலிசம், கேப்பிடலிசம், கம்யூனிசம், பாசிசம்,
நாசிசம், நியுடிலிசம் போன்ற இசங்கள் (கொள்கைகள்) குறித்து மிகத் தெளிவான விளக்கத்தைப்
பகர்கிறார். இதுபோன்ற அரிய கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதனைப் படிப்பவர்
கனல்களாகப் பொங்கிஎழுவது திண்ணம். இன்றைய தேவையும் இதுவே….. வெறும் ‘கரி’யாக இல்லாமல்
கனலாக இருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன