செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தாய் - மக்சீம் கார்க்கி – தமிழில் தொ.மு.சி. ரகுநாதன்

 



தமிழ்ச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறியலாம். இதனைப் பல்வேறு ஆய்வுகளும் நிறுவுகின்றது. பெண்ணே அனைத்தையும் வழிநடத்துபவளாக இருந்துள்ளாள். இந்நிலையில் பொதுவுடைமைச் சித்தாந்தம் (கம்யூனிசம்) பரவியுள்ள நாடுகளிலும் தாய்வழிச் சமூகம் இருந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து எழுந்த பல படைப்புகளுள் முக்கியமானது ‘தாய்’ நாவல். மக்சீம் கார்க்கி அவர்கள் எழுதிய இந்நாவல், கம்யூனிசச் சித்தாந்தத்தின் அடிப்படையைப் பரப்ப முயன்ற தன்னுடைய மகனுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்தாள்.

உதவிசெய்ய முனைந்த தாய் என்னென்னச் சிக்கல்களை அனுபவித்தாள் என்பதை நாவல் மிகவிரிவாகப் பேசுகிறது. தொ.மு.சி. ரகுநாதனின் தமிழ் மொழிபெயர்ப்பில் தாய் மேலும் மிளிர்கிறாள். தாயின் சிறப்பினைப் பாரதிதாசனும், கலைஞரும் அவர்களது பார்வையில் கலைநயத்துடன் போற்றியுள்ளனர். தாய் நாவலை இதுவரை படிக்காதவர்கள் தயவுசெய்து படித்துப் பாருங்கள்…… தாயின் நிலை என்னவானது என்பதை நாவலில் காணுங்கள்……


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...