சனி, 14 ஜனவரி, 2023

சமூக நிலை _ இன்றைய கொண்டாட்டம்


அகத்தில் ஒளிர்ந்த தமிழகம்

நாடெனச் சொல்வதில் பெருமிதம்

இருப்பினும்

சாதிய சாக்கடை எனும்

முடைநாற்றம் வீசுகின்ற

பாழ்பட்ட நாட்டிலே

தெருச்சண்டை போடுகிறோம்

நாடா? அகமா? 




தேவையற்ற ஒன்றிற்காய்

தேவையானதைத் தேவையறிந்து மறந்து 

தேவையில்லாத வேலை செய்யும் 

தேவையற்ற மனிதர்களின் 

தேவையற்ற செயல்பாடுகளால் 

தேவையற்ற ஈடுபாட்டோடு 

தேவையின்றிச் சிலரின் 

தேவைக்காகப் பின்தொடரும் 

அவலம் 


புத்தாண்டு மகிழ்வு 

அகத்தில் மலர்ந்தால் என்ன? 

நாட்டின் மலர்ந்தால் என்ன? 

அகமாக இருப்பினும் நாடாக இருப்பினும் 

சாதீய சாக்கடைகள் நாற்றமோ 

அச்சாக்கடையில் நெளியும் புழுவோ 

(புழுவே என்னை மன்னித்துவிடு மனிதனோடு உன்னை ஒப்பிட்டுப் பேசுவதற்காய்) 

மலம் கலக்கும் நிலையோ

மாறிடவா போகிறது? 


இதில் 

புத்தாண்டு நாளிற்காய்ப் 

புதிதாய் ஒரு புரட்சி 

பிறக்கின்ற ஆண்டு

தையில் பிறந்தால் என்ன? 

சித்திரையில் பிறந்தால் என்ன? 

புத்தாண்டு புதுமைகள் செய்யும் புரட்சியாண்டாக என்று மலரும்? 


நம் மனநிலை மாறாமல் 

புத்தாண்டு மலர்ந்து மட்டும்

என்ன 

புதுமை காணப்போகிறது? 


நாசமாய்ப் போகட்டும் சாதிய சமூகம் 

நற்பண்பு கொண்டு வளரட்டும் சாதியற்ற சமுதாயம் 


அன்று 

இணைந்து கொண்டாடலாம் 

தமிழர்ப் புத்தாண்டு.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...