- மாலதி
- பார்ப்பான் – பார்ப்பினி
- பாசண்டச் சாத்தன்
- தேவந்தி
- கண்ணகி
- கோவலன்
- இடாகினிப்பேய்
மகளிர் மாலைக்கால வழிபாடு
சூரியன் மறைந்த மாலைப்பொழுதில் நெல்லோடு மலர்ந்த முல்லைப்
பூக்களைக் கொண்டு பெண்கள் தங்கள் வீடுகளில் இறைவனை வழிபட்டு நிற்பர்.
மகனை இழந்து வாடும் மாலதி
- மாலதி தன் மாற்றாளின் குழந்தைக்குப் பால் ஊட்ட அது விக்கிச்
செத்தது. அந்தப் பழி தன்மீது வரும் என்று அஞ்சி அவள் ஊரில் உள்ள பல கோயில்களுக்கும்
சென்று அக்குழந்தையைக் கிடத்தி உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினாள்.
அவள் சென்ற கோட்டங்கள் பின்வருமாறு:
v
அமரர் தருக்கோட்டம்
v
வெள்யானைக் கோட்டம்
v
வெள்ளை நாகர் கோட்டம்
v
உச்சிக்கிழான் கோட்டம்
v
ஊர்க்கோட்டம்
v
வேற்கோட்டம்
v
வச்சிரக் கோட்டம்
v
புறம்பணையான் வாழ்கோட்டம்
v
நிச்சந்தக் கோட்டம்
v
நிலாக்கோட்டம்
v
சுடுகாட்டுக் கோட்டம்
Ø
இறுதியாக, பாசண்டச் சாத்தனுக்கு உரிய கோயிலை நோக்கிச் சென்றாள்.
அங்கே இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று வந்து, “தவம் செய்யாதவர்க்குத் தேவர்கள்
வரம் தரமாட்டர்கள்” என்று கூறிச் செத்த குழந்தையைக் கையால் பற்றிச் சுடுகாட்டுக்கு
எடுத்துச் சென்று விழுங்கி விட்டது.
Ø
உயிர் நீங்கிய உடலும் அடையாளத்துக்குக் கூட இல்லாமால் போய்
விட்டது. இடி உண்ட மயில் போல் துடிதுடித்தாள், ஏங்கி அழுதாள்.
Ø
“அன்னையே நீ அழாதே” என்று கூறி, சோலையில் கிடக்கும் ஒரு குழந்தையை
“எடுத்துச் செல்க” என்று அத்தெய்வம் கூறியது. பாசாண்டச் சாத்தனே அக்குழந்தை வடிவாகியது.
மாற்றுக் குழந்தை கிடைத்தவுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று தன் பழியைப் போக்கிக்
கொண்டாள்.
Ø
அந்தக் குழந்தை வளர்ந்து கல்வி பெற்றுப் பெரியவன் ஆகி அந்தக்
குடும்பத்துப் பொறுப்புகளை ஏற்று வாலிபன் ஆயினான். அப்பெற்றோர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு
உரிய கடமைகளைச் செய்து மணமும் செய்து கொண்டான். தேவந்தி என்பாள் அவன் வாழ்க்கைத் துணைவியாயினாள்.
Ø
நாள்கள் சில நகர்ந்தன. அவளோடு தொடர்ந்து வாழாமல் தான் தெய்வம்
என்பதை அவளுக்கு உணர்த்தி “எம்முடைய கோயிலுக்கு நீ வா” என்று கூறிச் சென்றான்; ஊரார்க்குப்
பதில் கூற வேண்டும். தேசாந்திரம் சென்ற கணவன் திரும்பி வருவதற்காகத் தான் கோயில் சென்று
வழிபடுவதாகக் கூறி வழிபாடுகள் மேற்கொண்டு வந்தாள்.
கண்ணகி
கனவு
o
கண்ணகி தன் கணவனைப் பிரிந்து கவலையுறுகிறாள் என்பது அறிந்து
அவளுக்கு ஆறுதல் கூற அவள் இல்லம் அடைந்தாள்.
o
அப்போது தான் கண்ட கனவினைத் தேவந்திக்கு எடுத்துரைத்தாள்.
o
“அந்தக் கனவினை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகின்றது. என்
கணவன் என் கையைப் பிடித்துப் புதிய ஊருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே பழிச் சொல்
ஒன்று கூறினர். அதனைத் தொடர்ந்து கோவலனுக்கு ஒரு தீங்கு நிகழ்ந்ததால் அது கேட்டுக்
காவலன் முன் சென்று நான் வழக்காட அதனைத் தொடர்ந்து அந்நகரும் அரசனும் அழிவுற்றனர்.
அதன்பின் உயிர் துறந்த என் தலைவன் உயிர் பெற்று என்னைச் சந்தித்துப் பேசினார். இதனை
நீ நம்பமாட்டாய்; சிரித்துப் பொய் என்று கூறுவாய்; இது யான் கண்ட கனவு ஆகும்” என்று
உரைத்தாள்.
தேவந்தியின்
அறிவுரையும் கோவலன் வருகையும்
v
அதனைக் கேட்ட தேவந்தி, “சென்ற பிறவியில் நீ உன் கணவனுக்காகச்
செய்ய வேண்டிய நோன்பினைச் செய்யாமல் விட்டு விட்டாய். அதனை இப்பொழுது செய்க.
v
கடலொடு காவிரி கலக்கும் இடத்தில், நெய்தல் மணக்கும் கானலில்
சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. அந்நீர்த் துறைகளில் முழுகிக்
காமவேள் ஆகிய மன்மதன் கோயில் சென்று தொழுதால் இந்த உலகத்தில் பெண்கள் கணவனோடு இன்புற்று
வாழ்வர்;
v
அடுத்த பிறவியிலும் இருவரும் மகிழ்வுடன் இருப்பர். எனவே,
நாம் இருவரும் சென்று நீராடுவோம்” என்று கூறினாள்.
v
அவள் உரைத்த உரைகள் அனைத்தும் கேட்ட கண்ணகி “பீடு அன்று”
என்று கூறினாள்.
v
அதன்பின் ஏவற்பெண் ஒருத்தி, வந்தவன் காவலன் என்று குறிப்பிட்டாள்.
கோவலன் வருகிறான் என்பதை அறிவித்துச் சென்றாள்.
கோவலனின்
வருத்தமும் முடிவும்
ü
கோவலனும் நேரே வந்து பள்ளியறைக்குச் சென்று அவளைப் பார்த்தான்;
கண்ணகியின் வாடிய மேனிகண்டு வருத்தம் அடைந்தான்;
ü
“வஞ்சனை மிக்க ஒருத்தியின் வலையில் அகப்பட்டுக் குலம் தந்த
செல்வத்தை எல்லாம் தொலைத்து விட்டேன். குன்று போன்ற செல்வம் அது குன்றி விட்டது; இலம்பாடு
(வறுமை) அது எனக்கு நாணத்தைத் தருகிறது” என்று அவளிடம் தன் மனநிலையைத் தெரிவித்தான்;
ü
கண்ணகி, “சிலம்பு உள கொண்ம்” என்றாள்.
ü
“இழந்த பொருளை ஈட்டுதல் வேண்டும், இந்தச் சிலம்பினை முதற்
பொருளாகக் கொண்டு நகைகள் செல்வம் அனைத்தையும் மீட்பேன்” என்றான். மாடமதுரைக்குச் சென்று
வாணிபம் செய்யும் கருத்தை அறிவித்தான்.
மதுரைக்குச்
செல்லுதல்
§
அவளையும் ‘உடன் வருக’ என்று அழைத்தான். இருள் நீங்கிய விடியற்பொழுதில்
வீட்டை விட்டுச்சென்றார்கள்.
§
கோவலனுடன் கண்ணகியும் புறப்பட்டாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன