அறிவியல் விளைவு அகிலம் நிறைக்க
அரசு தந்த அறிவுரை கேட்டு
அமைதியாய் நாமும் அடங்கினோம் வீட்டினுள்
அறமே செய்து அன்பில் மகிழ
ஆர்வம் கொண்டு ஆயிரம் உதவிகள்
நீட்டினர் பலரும் நீக்கமற எங்கும்
கரோனா என்னும் காரிருள் அகற்ற
தடுப்பு மருந்தைத் தந்து (உ)தவினர்
மருத்துவர் செவிலியர் மருந்தாளுநர் யாவரும்
தளர்வுகள் நீங்கித் தடுமாற்றம் (இ)ல்லாமல்
தளர்ச்சி நீக்கித் துணிந்து எழும்போது
ஒமிக்ரான் வந்து உளமதைப் பதைக்க
நினைக்கும் போது நிழலாய் உறைகிறேன்
தடைகள் பலவும் தாண்டுவோம் என்ற
நம்பிக்கை கொண்டு வரவேற்போம்
புத்தாண்டில் நமக்குப் புத்தொளி பிறக்கவே…..
மனதிற்கினிய புத்தாண்டு வாழ்த்துகள்
2022
------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன