சனி, 25 டிசம்பர், 2021

கிறிஸ்து பிறப்பு வாழ்த்து


மரியெனும் கன்னி மாசறு குணத்தொடு

மறையோன் உரைகேட்டு மனத்தில் இறுத்தி

மக்க(ள்) இனமே மகிழ்ந்து களிக்க

மாதவப் பெரியோள் மகிழ்வுடன் ஈன்றாள்


கன்னி ஈன்ற கண்மணி காத்து

கருணை பொங்க கருத்தாய் நோக்கிக்

காவல் புரிந்த வளனும் மகிழ்வு


மார்கழி மாத மன்னவன் பிறப்பு

மனங்கள் தோறும் நனிகூர் மகிழ்வு


மகிழ்ச்சி நிலைக்க மனங்கள் குளிர

மன்னவன் பிறந்த நாளதைப் போற்றிக்

கூறுவேன் யானும் குறைவிலா வாழ்த்து


கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள் 

💐🌷✨👑

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...