சனி, 28 அக்டோபர், 2023

பதிற்றுப்பத்து - புலாஅம் பாசறை

 புலாஅம் பாசறை

சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது (ஏழாம் பத்து)

  •  பலாப்பழங்கள் பழுத்து அதன் நறுமணம் நாடுமுழுக்கப் பரவும்படி அமைந்த மலைநாட்டை உடையவன்!
  •  மிகச்சிறந்த ஓவியனால் வரையப்பெற்ற ஓவியம் போன்று அமைந்த அழகுமிக்க மனைவியை உடையவன்!
  •  பொன்னால் செய்யப்பட்டது போன்ற சிறியபூவை உடைய உன்னமரத்தின் பகைவன் எம் தலைவன்! (உன்னத்துப் பகைவன் எம்கோ)
  •  மணம்வீசும் சந்தனம் மார்பில் பூசியவனும், யார்வந்து கேட்பினும் பொருளைத் தருபவனுமாகிய பெரிய கையுடையவன் எம் தலைவன் பாரி.
  •  இரவலர்கள் தங்கள் முழவில் பூசிய மண் காய்வதற்குள் பொருளைத் தருபவன். ஆனால் தற்போது பூசப்பட்ட மண் காய்ந்துவிட்டது. இரவலர்களும் ஏங்கித் தவிக்கின்றனர். திரும்ப வரமுடியாத இடத்திற்குச் சென்றான் எம் தலைவன் பாரி.
  •  அவன் இறந்துவிட்டான் என உன்னிடம் இரந்துகேட்க (பிச்சையெடுக்க) வரவில்லை.
  •  பொருளை வாரி வழங்கும் உன் வள்ளல் தன்மை கருதியே உனைக் காணவந்தேன்.
  •  ஒளிவீசக்கூடிய வாளும், யானைக்கூட்டங்களும் இருக்கக்கூடிய புலால் நாற்றம் வீசும் பாசறையில் நீ தங்கியிருக்கிறாய்.
  •  நிலவு போன்ற நெற்றியை உடைய பாடினி முழவினை இசைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள்.
  •  திருவிழாவினைப் போன்ற இவ்விடத்தில் நீ மகிழ்ந்திருக்கிறாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...