சனி, 28 அக்டோபர், 2023

பதிற்றுப்பத்து - சான்றோர் மெய்ம்மறை

சான்றோர் மெய்ம்மறை 
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது (இரண்டாம் பத்து)

  •  நிலம், நீர், காற்று, ஆகாயம் (வானம்) ஆகிய நான்கைப் போன்று அளவிட முடியாதவனே!
  •  நாள், கோள், நிலவு, சூரியன், நெருப்பு (தீ) இவ்வைந்தும் இணைந்த புகழ் பெற்றவனே!
  •  போரை மிகுதியாக விரும்பிய கௌரவர்கள் நூறுபேருடைய படையில் வீற்றிருந்த கர்ணன் (அக்குரன்) போன்ற வலிமை வாய்ந்தவனே!
  •  தும்பைச்பூவைச் சூடிவரும் பகைவரை நேருக்கு நேர் நின்று களத்தில் அழிக்கும் ஆற்றல் பெற்றவனே!
  •  எமனின் கோபத்தையும் அடக்கும் ஆற்றல் மிக்கவனே!
  •  முடிபொருந்திய செல்வம் மிகுந்த அரியணையில் வீற்றிருந்தாலும் தன் படைவீரர்களுக்கும், தம் மக்களுக்கும் (சான்றோர்களுக்கு) கவசம் போன்று விளங்குபவனே!
  •  வானுலகத் தேவர்களுள் மிக்க அழகு மிக்கவர்களாக விளங்கக்கூடிய பெண்களே (ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகை உள்ளிட்ட பலர்) வியந்துபோற்றும் அழகுடைய மனைவியை உடையவனே!
  •  மிக்க யானைகளை உடையதும், நீண்ட நெடிய கொடிபொருந்திய தேர்களை உடைய வேந்தனே!
  •  சூரியன் சுற்றிவருகின்ற கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்தை முழுதும் ஆண்ட உன் முன்னோர்களைப் போல நீயும் புகழ்பெற்று நிலைத்து இவ்வுலகை ஆட்சி செய்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிறப்புடைய இடுகை

கூடுகள் சிதைந்தபோது’ வெளிப்படுத்தும் சமூகத் தாக்கம்

  சமூகம் என்பது தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த மனிதர் கூட்டத்தைக் குறிக்...